நிகழ்வுகள்
திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள்
1. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன்வார்கழல்கள் வாழ்த்தியவாழ்த்தொலிபோய் விதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே ஈதே எம்தோழி பரிசேலோ ரெம்பாவாய். 2. பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம் பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் சீசி இவையுஞ் சிலவோ விளையாடி ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசு மலர்ப்பாதம் தந்தருள … மேலும்